Auto ad

கூகுள்-ன் புதிய கடன் சேவை.. ரூ.15000 கடனுக்கு 111 ரூபாய் செலுத்தினால் போதும்.. வாவ்

 சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனத்திற்கு இந்தியா முக்கிய வர்த்தக சந்தையாக இருக்கும் வேளையில், தனது கூகுள் பே சேவை நாட்டின் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் சென்றடைந்துள்ளது. கூகுள் பே மூலம் இந்திய மக்களின் நிதி பரிமாற்ற தகவல்களை சேகரித்துள்ள நிலையில் புதிய கடன் திட்ட சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் உள்ள சிறு வர்த்தகங்கள், நிறுவனங்கள், வணிகங்களுக்கு உதவும் வகையில் Google Pay செயலி மூலம் சாசெட் கடன்களை (sachet loans) அதாவது மிகவும் சிறிய அளவிலான தொகை கொண்ட கடன்களை கூகுள் வழங்குவதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள வணிகர்களுக்கு பெரும்பாலும் சிறிய கடன்கள் அடிக்கடி தேவைப்படும், இதற்கு வங்கிகளில் ஒவ்வொரு முறையும் கடன் பெற முடியாது. இதேபோல் நண்பர்களிடம் ஒவ்வொரு முறையும் கேட்க முடியாது. இந்த இடைவெளியை பயன்படுத்திகொள்ள கூகுள் முடிவு செய்துள்ளது. இதற்காக கூகுள் தனது GPAY மூலம் அறிமுகம் செய்துள்ள திட்டம் தான் சாச்செட் கடன்கள். கூகுள் நிறுவனம் இந்தியாவில் உள்ள சிறு வணிக முதலாளிகளுக்கு 15,000 ரூபாய் மதிப்பிலான தொகையை sachet loans என்ற சிறு கடனாக வழங்க உள்ளது. இந்த கடன் வாங்கியவர்கள் இத்தொகையை வெறும் 111 ரூபாய் என்று சிறு தொகையை கூட திருப்பி செலுத்தும் வசதியை கூகுள் அளிக்கிறது. இத்தகைய கடன் சேவைகளை வழங்க கூகுள் நிறுவனம் DMI ஃபைனான்ஸ் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. சிறு வணிகர்கள் தங்கள் வர்த்தகத்திற்கு தேவையான செயல்பாட்டு மூலதன தேவைகளைத் தீர்க்க உதவும் ePayLater உடன் இணைந்து வணிகர்களுக்கான கடனை Google Pay வாயிலாக செயல்படுத்த உள்ளது. இந்த தொகையை வணிகர்கள் தங்களுக்கு தேவையான சரக்குகள் மற்றும் பொருட்களை வாங்குவதற்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என கூகுள் தெரிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் UPI மூலம் சுமார் 167 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொகை நிதி பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூகுள் பே பிரிவின் துணைத் தலைவர் அம்பரீஷ் கெங்கே இன்று நடந்த 9வது கூகுள் ஃபார் இந்தியா கூட்டத்தில் தெரிவித்தார்.



Read more at: https://tamil.goodreturns.in/news/google-introduced-new-sachet-loans-for-merchants-upto-15000-loan-pay-just-111-rupees-as-repayments-037841.html?utm_medium=taboola_news&utm_source=affiliate_traffic&utm_campaign=taboola_network&story=3  

Post a Comment

0 Comments

Contact Form

Name

Email *

Message *