Auto ad

பச்சைப்பயிறு.. பயிறுகளிலேயே பெஸ்ட் இதுதான்.. எக்கச்சக்க புரோட்டீன்.. சல்லுனு வெயிட் குறையும் பாருங்க

புரோட்டீன் என்றதுமே, நம் கண்முன் வந்து நின்றுவிடும் இந்த பச்சை கலர் பயிறு.. அதிலும் முளைகட்டின இந்த பச்சைபயிறில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா?


வைட்டமின் , பி, , மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து என ஏகப்பட்ட சத்துக்கள் இந்த பயறில் உள்ளது. அளவுக்கு அதிகமான நார்ச்சத்து + புரதச்சத்து நிறைந்ததுதான் இந்த பச்சை பயிறுகள்.. இதன் நன்மைகளை லிஸ்ட் போட்டு சொல்ல முடியாது.. நன்மைகள்: பச்சை பயிறை, 10 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி, மெல்லிய துணியில் 10 நேரம் மீண்டும் கட்டிவைத்து, காற்றோட்டம் உள்ள இடத்தில் வைக்க விட வேண்டும். பிறகு, அடிக்கடி தண்ணீரை மட்டும் அதன்மீது தெளித்து வர வேண்டும். இப்போது முளை கட்டிய பச்சை பயறு கிடைத்துவிடும். அதற்கு பிறகு, இட்லி பானையில், நீராவியில் 5 முதல் 7 நிமிடம் வரை பச்சை பயரை வேக வைத்துவிட்டால், முழு ஊட்டச்சத்தும் கிடைத்துவிடும். இந்த முளைகட்டிய பயிறில் உள்ள நன்மைகள் ஏராளம்.


வெயிட் லாஸ்: அமினோ அமிலங்கள், பாலிபினால்கள் உள்ளதால், புற்றுநோய் செல்கள் அபாயத்தை தடுக்கிறது. உயர் ரத்த அழுத்த பிரச்சனை தீர்கிறது.. வயிறு தொடர்பான பிரச்சனைகளும் தீர்கின்றன.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது இந்த பயிறு.. கேன்சரையும் தடுக்கக்கூடியது.. தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது, உடல் எடையை குறைக்கக்கூடியது.. உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க கூடியது.. ரத்த சோகையை விரட்டக்கூடியது. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு பெஸ்ட் சாய்ஸ் இந்த பயிறு.. இதில் மிகக்குறைந்த அளவிலான கொழுப்புகள் உள்ளன.. குறைந்த கலோரிகளும், அதிக நார்ச்சத்தும், அதிக புரதச்சத்தும் உள்ளதால், எடை குறைக்க வெகுவாக பச்சை பயிறு உதவுகிறது.. தினமும் ஒருவேளையாவது, பச்சை பயிரை உணவாக எடுத்து கொள்ளலாம். இதனால் பசி உணர்வு ஏற்படாமல், வயிறு நிறைவு உணர்வு ஏற்படும். மேலும், நீரிழிவு, இதய நோய், போன்ற அபாயத்தையும் குறைக்கிறது.

வயிறு புண்கள்: வயிற்றுப்புண்ணை குணப்படுத்துவதில் பாசிப்பயிறுக்கு இணை வேறெதுவும் கிடையாது.. அல்சர் உள்ளவர்கள் தவறாமல் எடுக்க வேண்டிய உணவு இந்த பயிறு.. அதேபோல, ரத்தசோகை பிரச்சனை இருப்பவர்களும் உணவில் அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். குறிப்பாக பெண்கள் பலருக்கு ரத்தசோகை பிரச்சனை ஏற்படும். மாதவிடாய் நேரங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, உடல் பலவீனம் அடைந்துவிடும். இதுபோன்றோருக்கெல்லாம் வரப்பிரசாதமாக உள்ளது இந்த பச்சைப்பயிறு. கல்லீரலில் கொழுப்பு சேர்வதை இந்த பச்சை பயிறு குறைக்கிறது.. நரம்பு செயல்பாடு மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது.. ஊறவைத்து முளைகட்டிய பச்சை பயறு சாப்பிட்டுவந்தாலே பல நன்மைகளை நாம் பெறலாம்..!!

 

Read more at: https://tamil.oneindia.com/health/do-you-know-excellent-benefits-in-green-gram-and-how-we-prepare-moong-sprouts-for-weight-loss-548079.html?story=3


Post a Comment

0 Comments

Contact Form

Name

Email *

Message *